தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 30-வது இரத்ததான முகாம் 13.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.
இந்த முகாமில் *சுமார் 68 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 57 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த முகாமில் தன்னார்வ கொடையாளர்கள் மற்றும் ஜித்தா செந்தமிழர் பாசறையைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32 என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
Comments