சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான இன்டர்கான்டினென்டல் தாயிஃப் மற்றும் தாயிஃப் தமிழ்ச் சங்கம் ஆகியோர் களுக்கிடையே நட்பு ரீதியிலான கிரிக்கெட் தொடர் இன்டர்கான்டினென்டல் விடுதி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர் போட்டியினை 2/1 என்ற கணக்கில் தாயிஃப் தமிழ்ச் சங்கம் (TTS) வெற்றியை கைப்பற்றியது.
கிரிக்கெட் தொடரினை திறம்பட ஏற்பாடு செய்தமைக்கு TTS குழு உறுப்பினர்கள் சார்பாக, TTS கிரிக்கெட் குழு மேலாளர் திரு அஹ்மத் பாஷா, தலைவர் கார்த்திக், டிடிஎஸ் துணை மேலாளர் இசுபுதீன் மற்றும் கேப்டன் சுஜாத் ஆகியோர் இன்டர்கான்டினென்டல் பொது மேலாளர் திரு அப்துல்லா முகமது, மனிதவள மேலாளர் திரு அலி அல் ஷம்ரானி, மற்றும் தலைமை வரவேற்பாளர் திரு ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.
வெற்றி பெற்ற தாயிஃப் தமிழ்ச்சங்க அணியினை பாராட்டி பேசிய இன்டர்கான்டினென்டல் பொது மேலாளர் திரு அப்துல்லா முகமது, தனது திறமைகளை மேம்படுத்துவதில் கிரிக்கெட் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் சமுதாய பணிகளை சிறப்புடன் செயலாற்றும் தாயிஃப் தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்துவோம் என்றும் மிகுந்த கரகோஷத்திற்கிடையே உறுதி அளித்தார்.
அன்புடன் சிராஜ்
Kommentare