சவுதி அரேபியாவில் June 1, 2023 வியாழக்கிழமை United Tamil Sangam KSA
(சவூதி அரேபியா தமிழ்ச்சங்க கூட்டமைப்பு) ல் அங்கமான கோபார் மற்றும் அல்-அசா தமிழ்ச் சங்கங்கள் இரண்டும் இணைந்து தம்மாமில் உள்ள மைமோனா உணவகத்தில், நடந்து முடிந்த 2023 12 ம் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கோபார் தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் திரு. S.K.S. சிக்கந்தர் பாபு அவர்கள் தலைமை தாங்க அல்-அசா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் முனைவர் திரு. நாகராஜன் கணேசன் அவர்கள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திரு. உமா சங்கர், திரு. அப்துல் அலீம் சித்திக், திரு. ஜெபசிங், திரு. பிரேம்நாத் மற்றும் திரு. தமிம்முல் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை உரை நிகழ்த்தினார்கள்.
அதிக மதிப்பெண் பெற்ற தமாம் இந்திய பன்னாட்டு பள்ளி மாணவிகள் ஷஃபானா நஷீர், நௌஷின் ஷாஃபிரா மற்றும் அல்-அசா மாடர்ன் சர்வதேச பள்ளி மாணவி சாயீதா அதிபா ஆல்வி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திரு. பாலாஜி, திருமதி சத்யா பாலாஜி, திருமதி அருணா நாகராஜன், மற்றும் திரு. ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இறுதியில் ஆசிரியை திருமதி. ஃபரிதா அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
சவூதி அரேபியா தமிழ்ச் சங்க கூட்டமைப்பு
United Tamil Sangam, KSA.
Commentaires