செங்கடல் தமிழ்ச் சமூகம் சார்பில் ஜெத்தா ஷரஃபியாவில் உள்ள ஷப்பைர் உணவக கூட்ட அரங்கில் 28-12-2024 சனிக்கிழமை மாலை ஜெத்தா பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்ட பட்டிமன்றம்
"பொருளாதாரமே நாட்டின் முதுகெலும்பு. ஆம் /இல்லை" எனும் தலைப்பில் நடந்தது.
பன்னாட்டுப் பள்ளியின் ஆசிரியை திருமதி பானு ஹமீத் அவர்கள் நடுவராக இருந்து மாணவர்களை தயார் செய்து, சிந்தனையைத் தூண்டும் பல செய்திகள் பார்வையாளர்கள் பாராட்டும்படி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
ஜெத்தா இந்தியப் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் முஹம்மது ஷஃபீக், முகமது ஆசில், ஜேஸன் சாமுவேல், கோகுல் சாய்நாத், ஆதிஷ் மோகன் மற்றும் ஷகீல் அஹ்மத் ஆகியோர் பட்டிமன்ற பேச்சாளர்களாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
பட்டிமன்றத்தை தொடர்ந்து தமிழில் பேச்சுப் போட்டி, "தமிழ் பண்டிகைகள்" என்ற தலைப்பில் 10 வயதிற்குள் உள்ள மாணாக்கர்களும், தமிழ்க் கலாச்சாரம் என்னும் தலைப்பில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணாக்கர்களும் கலந்து கொண்டு தங்கள் உரை நிகழ்த்தினார்கள்.
சுமார் 32 மாணாக்கர்கள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டியில் ஜெத்தா வாழ் மூத்த முன்னோடி தமிழ் மக்களும், தமிழின் மீது தீராக் பற்றும் கொண்ட டாக்டர் ஜெயஸ்ரீ மூர்த்தி மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ராமச்சந்திரன் அவர்களும் நடுவர்களாக இருந்து தமிழின் பெருமைகளை எடுத்துரைக்க, பேச்சுப் போட்டியின் அவசியத்தையும் உணர்த்தி பேசி மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டியும் மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியினை செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் குலாம் மைதீன், நரேஷ், பூஜா நரேஷ், ஜொஹ்ரா குலாம், சாதிக், ஜூல்ஃபி, பாரூக், இர்ஃபான், ரயீஸ், அப்பாஸ் , உமர், சலீம் மற்றும் பன்னாட்டுப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் குரு, பானு ஹமீத் மற்றும் விஷாலாட்சி ஏகப்பன், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்ய, இந்தப் போட்டியின் தேர்வாளர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்புகளை வருகின்ற ஜனவரி திங்கள் 16 அன்று நடக்க இருக்கின்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் அறிவித்து வழங்குவதாக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை லயன் ஜாகிர் உசேன் அறிவித்தார்.
அன்புடன் M.Siraj
留言