அமீரகத்தில் போலி தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக குடியிருப்பாளர்கள் இடமிருந்து காவல்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டவை காவல்துறையினர் இந்த தேடல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.
காவல்துறை விசாரணையில், போலிப் பொருளை விநியோகித்தல், பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிது பேச்சுவார்த்தை நடத்தி முடித்தல் ஆகிய குற்றங்களை ஆசிய கும்பல் ஒப்புக்கொண்டனர்.
தங்க முலாம் பூசப்பட்ட உலோகத் தகடுகளை இந்த கும்பல் நாட்டுக்கு வெளியே ஏற்றுமதி இறக்குமதி செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்த வழக்கு அரசு தரப்புக்கு மாற்றப்பட்டது.
ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் உமர் அகமது இதுகுறித்து கூறுகையில், அடையாளம் தெரியாத ஆசியர்கள் போலித் தங்கம் வாங்கிக் கொண்டு குடியிருப்பாளர்களை ஏமாற்றியதாக அதிகாரிகளுக்குப் பல புகார்கள் கிடைத்தன.இந்த ஆசிய கும்பல் முதலில் சந்தையில் பொருள்களை வாங்குபவர்கள் உடன் தொடர்பு கொள்வார்கள் பின்னர் மொபைல் போன்களை மலிவான விலையில் வழங்குவார்கள். கடைக்காரர்களின் கவனத்தை அவர்கள் பெற்றவுடன், சந்தேக நபர்கள் அவர்களிடம் முறையான தங்கத் துண்டுகளைக் காட்டுவார்கள்.
உண்மையான விற்பனை நிலையங்களில் தங்கத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க குற்றவாளிகள் ஷாப்பிங் செய்பவர்களை ஊக்குவிப்பார்கள் என்று கர்னல் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் நம்பியதும், குறைந்த விலைக்கு விற்க ஒப்பந்தம் போடுவார்கள். இருப்பினும், வழங்கப்பட்ட பொருட்கள் போலியானதாக இருக்கும், பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் உணருவார்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவில் விலைமதிப்பற்ற உலகம் களுக்கான மிகச் சிறந்த சந்தையாக இருக்கிறது. இதனால் இங்கு பல்வேறுபட்ட பொருள்கள் மாறுபட்ட விலையிலும் இருக்கிறது, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே தங்கங்களை வாங்க வேண்டும் என்று காவல்துறை கூறியுள்ளது.
மேலும் இது போன்ற குற்றங்கள் நடந்தால் குடியிருப்பாளர்கள்,ஷார்ஜா காவல்துறையின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் அல்லது www.shjpolice.gov.ae என்ற இணையதளம் அல்லது ஹாட்லைன் 80040 மூலம் கிடைக்கும் (ஹேர்ஸ்) சேவை உட்பட பல்வேறு சேனல்கள் மூலம் தெருவோர வியாபாரிகள் குறித்து புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comentários