இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெத்தா இந்திய தூதரக வளாகத்தில் புதிதாக பதவியேற்ற இந்திய துணைத் தூதர் பாஹத் அஹமத் கான் சூரி அவர்கள் இந்திய கொடியினை ஏற்றி குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.
ஜெத்தாவில் வசிக்கும் இந்தியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த சிறப்பு மிக்க விழாவில் தொடர்ந்து பேசிய இணைத் தூதர், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தூதரகத்திற்கு வருமாறும் தூதரகச் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கலை உணர்வுகளை ஊக்குவிக்க குழந்தைகளின் திறன்களை ஆராய்ந்து பள்ளிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், தூதரக சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் பொதுமக்கள் தங்கள் சரியான கருத்துக்களை இணைத் தூதரகம் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் மையங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் இந்திய பன்னாட்டு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தேசபக்தி பாடல்கள் பாடி வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி படுத்தினார்கள்.
அன்புடன் M.சிராஜ்
Comments