இலங்கை முஸ்லிம்கள் குறைந்த செலவில் ஹஜ் செய்ய வழிவகை செய்யும் படி இலங்கை அமைச்சரிடம் ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவுதி அரேபியா கோரிக்கை.
புனித உம்ராவிற்கு வந்திருந்த இலங்கை
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான *அல்ஹாஜ் கெ.காதர் மஸ்தான்* அவர்களை கடந்த 3-3-24 அன்று அஞ்சப்பர் உணவகத்தில் ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடல் செய்தார்கள்.
இதில் அமைச்சரிடம் கீழ்கண்ட நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
1.தமிழக ஹஜ் கமிட்டி போன்று
இலங்கையிலும் ஏற்படுத்தி குறைந்த செலவில் இலங்கை முஸ்லீம்கள் ஹஜ் செய்ய வழிவகை செய்வது.
2.சவுதியிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நூல்கள் சுங்க அதிகாரிகளால் இடை நிறுத்தம் செய்யப்படுவதை நீக்க வேண்டும்.
3.போர் காலத்தில் வீடு இழந்த சிறுபான்மை மக்களுக்கு வீடும் உரிய நிவாரண தொகையும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
4.வெளிநாடு வேலை முடித்து ஊர் திரும்புபவர்களுக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் உதவி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
இதில் முதல் கோரிக்கையை (4-3-24) அன்று நடைபெற்ற இலங்கை தூதரக சந்திப்பில் எடுத்துரைத்த அமைச்சர் அவர்கள் அடுத்த ஆண்டில் இது குறித்து ஆலோசனை செய்து முயற்சி செய்வதாக தூதரக அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்கள்.*
நேற்றைய இனிய சந்திப்பில் IWF மண்டல நிர்வாகிகளான காரைக்கால் அப்துல் மஜித், பொறியாளர் நீடூர ரில்வான், பொறியாளர் திருவண்ணாமலை நாசர், மங்களகுடி தாஹா மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் காஜா மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
Comments