இந்திய மற்றும் சவுதி கலாச்சாரத்தைக் கொண்டாடும் மறக்க முடியாத ஒரு கலை இரவாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆசிய சமூக கலைநிகழ்வுகள் வரிசையின் ஒரு பகுதியான இந்த நிகழ்வில் சுமார் 20000 பார்வையாளர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்திய கலைஞர்களை கொண்டு கண்கவர் துள்ளலிசை சூழலில் காட்சிப் படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 26.2024 அன்று திட்டமிடப்பட்டிருக்கிம் இந்த இந்திய கலை இரவு நிகழ்ச்சியில், பாடகர்கள் டாப்ஸி, நிகிதா காந்தி, சல்மான் அலி, தொகுப்பாளர் காஹூர் அலி கான் மற்றும் சஞ்சீத் குழுவினரின் நடனங்கள் உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியை உறுதியளிக்கிறது. உணவகங்களிலிருந்து இந்திய உணவுவகைகள், இசை, பொழுதுபோக்கு என பார்வையாளர்கள் எதிர்நோக்கலாம்.
மேலும், இது குறித்து ஜெத்தா சீசன் திட்ட மேலாளர் நோஷீன் வாசிம் கூறுகையில்,
"இந்த கலையிரவுக் கொண்டாட்டத்தை ஜெத்தாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த நிகழ்வு கலாச்சார பரிமாற்றம் மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்" என்றார்.
இசை நிகழ்ச்சிகளைத் தவிர, குழந்தைகளைக் கவரும் வகையில் எண்ணற்ற விளையாட்டு அம்சங்களும், சிற்றுண்டி அரங்கங்களும் அமைக்கப்படும்.
"கடந்த சீசனில், இந்திய சமூகத்தினர் காட்டிய வரவேற்பும் உற்சாகமும் மிகப்பெரியது" என்று திருமதி நோஷீன் வாசிம் மேலும் கூறினார்.
"நுழைவுச்சீட்டுகள் தொடர்பான விவரங்களுக்கு ஜெத்தா சீசன் வலைத்தளத்தைப் பார்வையிடவும், இந்த சிறப்பான நிகழ்வில் கலந்துகொள்ள தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும் அனைவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்".
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் இந்த ஜெத்தா சீசன், இணையற்ற பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அனுபவங்களை அதே தரத்துடன் மீண்டும் ஒரு முறை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து ஜெத்தா சீசன் வலைத்தளத்தைப் பார்வையிடவும். டிக்கெட் விலை 35 ரியால்கள் இதனை வீபுக் (Weebook) தளத்தில் பெறலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்தான அறிமுக கூட்டம் நேற்று திட்ட மேலாளர் திருமதி நோஷீன் வாசிம் தலைமையில் திருமதி பராஹ் ஒருங்கிணைக்க செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி குறித்த பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
அன்புடன் M. Siraj.
Comments