கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாகவும், அயலகத் தமிழர் திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி, அவரது சிறப்பான ஆட்சியை பாராட்டும் வகையில், சவுதி அரேபியா வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத் (NRTIA) சார்பில், மாபெரும் இரத்ததான முகாம் 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை KING FAHAD MEDICAL CITY மருத்துவமனை மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து சமூகப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த இரத்ததான முகாமை திரு. பிரவீன் குமார், இரண்டாவது செயலாளர், இந்திய தூதரகம் (ரியாத்) சமூக நல துறையின் இறப்பு பதிவு பிரிவு மற்றும் திரு. மொய்சுதீன் சலீம், தமிழ்நாடு சார்பில் இந்திய தூதரக வழிகாட்டு குழு உறுப்பினர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தனர்.
அவர்களுடன் NRTIA துணை பொறுப்பாளர் Dr. சந்தோஷ் பிரேம், NRTIA செயலாளர் திரு. சாமி துரை, ஒருங்கிணைப்பாளர் திரு. ஜனார்த்தனன், துணை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது வசிம், பொருளாளர் வெல்கம் ஆறுமுகம், இளைஞர் அணி தலைவர் திரு. அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி செயலாளர் திரு. அண்ணாதுரை, நகரத் தலைவர் திரு. நவாஸ், தமிழ் கலாச்சார பாரம்பரிய செயலாளர் திரு. முருகவேல், மற்றும் திரு. நீதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மகளிர் அணி செயலாளர் திருமதி Dr. கவிதா கணேஷ் அவர்கள் இரத்த தானம் செய்பவர்களுக்கு உணவு வழங்கி, நிகழ்வின் சிறப்பை உயர்த்தினார்.
தாய்நாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்த திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் நாகை மாவட்ட துணை அமைப்பாளர் கவிஞர் நாகூர் பாரி அவர்களின் பங்கேற்பு இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தது.
தமிழக அரசின் அயலக நலத்துறை அடையாள அட்டைக்கான இலவச பதிவு முதல் 16 பேருக்கு வழங்கப்பட்டது.
காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் (IUML) திரு. நாசர், இந்திய வெல்பேர் ஃபோர்ம் ஒருங்கிணைப்பாளர் (IWF) திரு. நூர் முகமது ரியாத் இந்திய சங்கம் (RIA) திரு. மாதவன்
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர் திரு. ஜாபர் சித்திக். உலகளாவிய தமிழர் நல சங்கம் திரு. சையது மரைக்காயர் மற்றும் அவரது செயற்குழு உறுப்பினர்கள், மனிதநேய கலாச்சார பேரவை திரு. காஜா மற்றும் திரு. தௌபிக், மனிதநேய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல செயலாளர் @Thanjai_Musthafa, செய.தவ்பிக்,பரீத்,அப்துல்லா ஆகியோர் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
தகவல்:
வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத் (NRTIA)
அன்புடன் : M.Siraj
Comments