ஜெத்தாவில் பிரவாசி பாரதிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி இரானி மற்றும் இணை அமைச்சர் மாண்புமிகு முரளிதரன்.
ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி இரானி அவர்கள் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்ட பிரவாசி பாரதிய கருத்தரங்கு ஜெத்தா ரிட்ஸ் கார்ல்டன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் இந்திய நாட்டிற்கான தூதர் மேதகு சுகைல் அஜாஸ் கான், துணை தூதர் மேதகு முஹம்மது ஷாஹித் ஆலம் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் சவுதி அரேபியாவின் இந்திய சமூகத்தின் அங்கமாகும்.
தமிழர்களின் சார்பாக முக்கிய அமைப்புகளான ஜெத்தா தமிழ்ச்சங்கம், இந்தியன் வெல்பேர் ஃபோரம் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செந்தமிழ் நல மன்றம், தமிழ் சொல்வேந்தர் மன்றம், தமிழ் பேரவை பிரதிநிதிகள் மற்றும் தமிழ் ஹஜ் சேவை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா வாழ் தமிழர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளான சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணிகளுக்கு புதிய வழித்தடம், சவுதி அரேபியாவில் இறந்தவர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்புவதில் உள்ள கால தாமதத்தை குறைக்க இணையவழி சேவைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
அன்புடன் சிராஜ்
Comments