05-10-2023 அன்று சவுதி அரேபியா ரியாத் இந்திய தூதரக வளாகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சவுதி அரேபியாவிற்கான துணை தூதர் மாண்புமிகு அபு மதன் ஜார்ஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவருடன் இந்திய மக்களின் நலன் துறை, இரண்டாவது செயலாளர் மாண்புமிகு திரு.மொயின் அக்தர் அவர்களும் சந்திப்பில் இருந்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற துணைத் தூதரகத்தின் மாண்புமிகு திரு. அபு மதன் ஜார்ஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இந்திய தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக வீட்டுப் பணிகளுக்கு வருபவர்கள் சந்திக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. தமிழ் ஓட்டுனர்கள் (ஹவுஸ் டிரைவர்கள்) பிரச்சனைகள், மருத்துவ பிரச்சினைகள் தொடர்பான நிலைமைகள் எடுத்துரைக்கப்பட்டது.
தங்களது அமைப்புகள் சார்பாக இந்திய சமூகத்திற்கு ஆற்றும் பல்வேறு சேவைகள் குறித்து தகவல்கள் பகிர்ந்து, தமிழ் சமூகங்களுக்கான சேவைகளை மேம்படுத்த தமிழ் அமைப்புக்கு ஆதரவளிக்க தூதரகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கம் (NRTIA) துணை அமைப்பாளர் Dr.சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட் PT PHDHR, மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.வாசிம் ராஜா இருவரும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
ரியாத் பிராந்தியத்தில் மக்கள் நலனில் அக்கறையும் மற்றும் தமிழ் சமூக மக்கள் எப்போதும் ஆதரிக்கும், சமூகப் பண்பாளர் தொழிலதிபர், திரு. பைசல் சிராஜுதீன், இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) சவுதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் திரு. நூர் முகமது, திரு. சாதிக் பாஷா மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் திரு.சையது மரைக்காயர், ஆகியோர் உடனிருந்தனர்.
Comments