முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் மறைவுக்கு OICC மேற்கு மண்டல குழு (ஜெத்தா) சார்பில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜெத்தாவில் சமூக, கலாச்சார மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டத்திற்கு OICC மேற்கு மண்டல குழு தலைவர் ஹக்கீம் பரகல் தலைமை தாங்கினார்.
இந்திய அரசியல் உலகம் இதுவரை கண்டிராத மாறுபட்ட அரசியல் தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், தனித்துவமான நிர்வாகி எனவும், நாட்டின் வரலாற்றை நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் விடாமுயற்சியால் மாற்றியமைத்து வெற்றி கண்டவர் என்றும் சிறந்த பொருளாதார நிபுணரும், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களில் மூளையாக செயல்பட்ட வருமான டாக்டர். சிங் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றி எழுதி, இந்தியாவின் வளர்ச்சியில் முன்னோடியாக முன்னேறினார் என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் மன்மோகன் சிங்கை நினைவு கூர்ந்தனர்.
நாசர் வெளியம்கோட் (கேஎம்சிசி), ஷிபு திருவனந்தபுரம் (நவோதயா), சிராஜ் (ஜெத்தா தமிழ்ச் சங்கம்), கபீர் குண்டோடி (மீடியா ஃபோரம்), சிஎச் பஷீர் (மீடியா ஒன்), அய்யூப் மாஸ்டர் (எஸ்ஐஎஃப்), யூசுப் பரப்பன் (பிரவாசி நலன்), காஜா முஹைதீன் (தமிழ்ச் சங்கம்) , நாசர் மச்சிங்கல் (கேஎம்சிசி) காலித் பாளையத் (மைத்ரி), ஓ.ஐ.சி.சி. தலைவர்கள் அலி டெகுடோ, ஜாஹீர் மஞ்சலி, மௌஷ்மி ஷெரீப், சோபியா சுனில், முனீர், மிர்சா ஷெரீப், ஷமீர் நத்வி, நாசர் கோழித்தொடி, ஹர்ஷத் ஏளூர், அய்யூப் பந்தளம், இஸ்மாயில் உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சியில் ஓ.ஐ.சி.சி., மண்டல குழு செயலாளர் ஆசாத் போரூர் வரவேற்புரை வழங்க, பொருளாளர் ஷெரீப் அரக்கல் நன்றி கூறினார்.
அன்புடன் M.Siraj
Comentarios