செங்கடல் தமிழ்ச் சமூகம் ஜெத்தா அரபைன் ரோட்டில் உள்ள அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கான ஓவியப் போட்டியை நடத்தியது.
இந்தியப் பன்னாட்டுப் பள்ளி, அல் உரூத், நியூ அல் உரூத், டெல்லி பப்ளிக் ஸ்கூல், அல்ஃபாலாஹ் பன்னாட்டுப் பள்ளி, அல் அஹ்தாப், அல்வாடி மற்றும் ஸ்ரீலங்கன் பன்னாட்டுப் பள்ளி உள்ளிட்ட 12 பள்ளிகளை சேர்ந்த 90 க்கும் அதிகமான பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
9 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்கள் Natute என்ற தலைப்பிலும், 10 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணாக்கர்கள் Fantacy என்ற தலைப்பிலும் 15 வயதுக்கு மேல் உள்ள பள்ளி மாணாக்கர்கள் Urban Life என்ற தலைப்பிலும் வண்ணக் கலவைகளாக தங்கள் கற்பனைகளை ஓவியங்களாக தீட்டினர்.
சிறந்த பரிசுக்குரிய ஓவியங்கள் தேர்வு செய்யும் நடுவர்களாக செந்தமிழ் நல மன்றத்தைச் சேர்ந்த ஓவியர் பாட்சா மற்றும் மருத்துவ மாணவியும் ஓவியக் கலை வல்லுனருமான அமீனா ஆகியோர் ஓவியங்கள் பார்த்து மதிப்பெண் கொடுத்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
கலந்து கொண்ட பெரும்பாலான மாணாக்கர்கள் மிகச்சிறந்த ஓவியங்களை தந்துள்ளதாக மகிழ்ச்சியாக கூறி இன்னமும் மெருகேற்றினால் வருங்காளத்தில் சிறந்த ஓவியர்களாக வருவர் என ஆலோசனையும் கொடுத்தனர்.
நிகழ்ச்சியினை செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் தஞ்சை லயன் ஜாஹிர் உசேன், குலாம் மைதீன், நரேஷ், இர்ஃபான், ராயிஸ், சாதிக் மற்றும் ஃபாரூக், செவிலியர் இலக்கியா ஆகியோரும் அஞ்சப்பர் உணவக மேலாளர் ரவி அவர்களும் உதவ பூஜா நரேஷ் மற்றும் ஜொஹராள் குலாமுடன் இணைந்து செயல்பட்டார்கள்.
அன்புடன் M.Siraj
Comments