சவூதி குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை புதிய எலக்ட்ரானிக் பாஸ்போர்ட்டுடன் மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான கட்டணம் இன்னும் அப்படியே உள்ளது என்றும், ஆது மாற்றப்படவில்லை என்று பாஸ்போர்ட் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும்
பாஸ்போர்ட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான கட்டணம் SR300 என்றும், 10 ஆண்டுகளுக்கு SR600 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய எலக்ட்ரானிக் பாஸ்போர்ட்டைப் பெற விரும்பும் குடிமக்கள் அப்ஷர் தளத்தின் மூலம் அந்தப் பிராந்தியத்தின் பாஸ்போர்ட்டுகளைச் சரிபார்க்க ஒரு சந்திப்பை முன்பதிவு செய்யலாம், இந்த முறை வழங்குவதற்கான முதல் கட்டம் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
புதிய இ-பாஸ்போர்ட்டின் தொடக்க நிலைகள் முடியும் வரை பாஸ்போர்ட் பழைய வடிவத்திலேயே வழங்கப்படும் என்று பாஸ்போர்ட் இயக்குனரகம் கூறியுள்ளது.
சவூதி குடிமக்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்டை உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் பின் நயீஃப் முன்னதாக அறிமுகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments