
ரியாத் சவூதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதாபிமான உதவிகளில் முன்னணியில் உள்ள ரியாத் இந்தியன் அசோசியேஷன் (RIA), தொழிலாளர் முகாமில் சம்பளமின்றி/உணவின்றி தவித்த 52 பேருக்கு உதவி வழங்கியது. (அல் கர்ஜ் - 19பேருக்கும்) (ரியாத் - 33பேருக்கும்) என மொத்தம் 52 தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.

ரியாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் மற்றும் உணவின்றி தவித்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 47 தொழிலாளர்களுக்கு, முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை RIA இன்று 14-02-2025 அன்று வழங்கியது.

5 பேர் ஏற்கனவே எக்ஸிட் பெற்று இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை RIA-வின் மனிதாபிமான பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு. பவாத் அப்துல் அஜீஸ், RIA தலைவர் திரு. உம்மர்க்குட்டி, செக்ரடரி திரு. அருண் குமாரன், மற்றும் மற்ற மூத்த நிர்வாகிகள் (OB – ஆபிஸ் பேரர்ஸ்), ஆலோசனை குழு உறுப்பினர்கள் (AB) ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும், இந்த மனிதாபிமான உதவித் திட்ட நிகழ்வில் RIA-வின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய தூதரகம் இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
RIA ஊடகப்பிரிவு.
ரியாத் சவூதி அரேபியா
Arif Abdul Salam
Comentarios