சவுதி அரேபியாவில் கடந்த அக்டோபர் 20 2021 அன்று , தொடங்கப்பட்ட ரியாத் சீசன் தற்போது 13 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்த ரியாத் சீசன் கண்காட்சியில் அரிய தங்க நகை கண்காட்சி, வாசனைப் பொருள்கள் கண்காட்சி, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், சவுதி அரேபியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் என பல்வேறு சாதனைகளை உள்ளடக்கியது இந்த ரியாத் சீசன்.
மேலும் சவுதி அரேபியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் எட்டு நாட்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது ரியாத் சீசன்.
பிப்ரவரி 26 அன்று 12 மில்லியன் பார்வையாளர்களாக இருந்தது , தற்போது அது 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பதிவு செய்துள்ளது.
ரியாத் சீசன் ஆனது, 5 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது. ரியாத் சீசன் பகுதிகளில் அரேபியப் பாடகர்களால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு இசைக் கச்சேரிகள் உட்பட பலவிதமான நிகழ்வுகள் மற்றும் உணவு பானங்களும் பரிமாறப்படுகிறது.
மேலும் மார்ச் 5 ஞாயிறு கிழமை முதல் ரியாத் சீசன் பார்வையாளர்கள் முகமூடி அணிய தேவையில்லை.
Comments