தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்த திருவைகாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் அமரும் நிலை இருந்தது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தரையில் அமர்ந்து எழுவதற்கு சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெத்தா தமிழ்ச் சங்க தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக அயலக அணி மாநில துணைச் செயலாளர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினருமான விஜயன் அவர்கள் தேவையான நாற்காலிகள் தனது சார்பில் வழங்கினார்.
ஜெத்தா தமிழ்ச் சங்கம்
Comments