top of page
Writer's pictureRaceTamil News

செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது

செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் ஜெத்தா சார்பில் அரபைன் ரோட்டில் உள்ள அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் மாணாக்கர்களுக்கான ஆங்கில பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

இந்தியப் பன்னாட்டுப் பள்ளி, அல் உரூத், நியூ அல் உரூத், டெல்லி பப்ளிக் ஸ்கூல், அல்ஃபாலாஹ் பன்னாட்டுப் பள்ளி, அல் அஹ்தாப், அல்வாடி மற்றும் ஸ்ரீலங்கன் பன்னாட்டுப் பள்ளிகளைச் சேர்ந்த 70 க்கும் அதிகமான பள்ளி மாணாக்லர்கர் கலந்து கொண்டு தங்கள் உரைகளை ஆங்கிலத்தில் தந்தனர்.

9 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்கள் Cleanliness is next to Godliness என்ற தலைப்பிலும், 10 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணாக்கர்கள் மற்றும் 15 வயது & அதற்கு மேல் உள்ள பள்ளி மாணாக்கர்கள் The Importamce of Financial Literacy மற்றும் Cultural Diversity and Inclusion என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் .

ஆங்கில பேச்சு உரைகளை மதிப்பீடு செய்யும் நடுவர்களாக டெல்லி பப்ளிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசன், சொல்வேந்தர்கள் சிராஜ் மற்றும் ராபியா மொய்தீன் ஆகியோர் செயலாற்றி மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள்.

நிகழ்ச்சியினை செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் தஞ்சை லயன் ஜாஹிர் உசேன், குலாம் மைதீன், நரேஷ், இர்ஃபான், ராயிஸ், சாதிக் மற்றும் ஃபாரூக் ஆகியோருடன் இணைந்து பன்னாட்டுப் பள்ளி ஆசிரியைகள் பானு ஹமீத், சிவசங்கரி, விசாலாட்சி மற்றும் ஆசிரியர் குரு ஆகியோர் இணைந்து உதவ நிகழ்ச்சியினை பூஜா நரேஷ் மற்றும் ஜொஹராள் குலாமுடன் இணைந்து செயல்பட்டனர்.


வந்திருந்த பெற்றோர்களும் பார்வையாளர்களும் இந்நிகழ்வு குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் ஓர் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றும் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்துமாறும் கோரிக்கை வைத்து விடைபெற நிகழ்வு இனிதாக நிறைவேறியது.


அன்புடன் M.Siraj

88 views0 comments

Comments


bottom of page