
சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், அல் அபீர் மருத்துவக் குழுவும் ஜெத்தா தமிழ்ச் சங்கமும் (JTS) இணைந்து 2025 மார்ச் 12 அன்று ஷராஃபியாவில் அமைந்துள்ள அல் அபீர் மருத்துவமனையில் மன்சூர் அல் மொசைத் நிறுவனத்தின் துறைமுகத் தொழிலார்களுடன் இப்தார் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த சிறப்பு இஃப்தார் விருந்து, பல்வேறு சமூகங்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிக்கும் நோக்கில் நடந்தது.

மேலும் இந்த நிகழ்வு, ஜெத்தா தமிழ்ச் சங்கம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இடையேயான நீண்டகால நட்புறவையும் வெளிப்படுத்தியது. இங்கு வெவ்வேறு பின்னணிகளையுடைய பல்வேறு நபர்கள் தங்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டு ஆழமான தொடர்புகள் இருக்கக் கூடிய விதத்தில் பங்கேற்பாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.


மேலும் இந்த நிகழ்வின் போது, அல் அபீர் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்ட அல் அபீர் பிரீமியம் சலுகை அட்டைகளின் நன்மைகளும் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
அன்புடன் M. Siraj
Comentarios