
ஜெத்தா மாநகரில் ஷரஃபியாவில் சித்தீன் சாலையில் உள்ள சமர் ரோஸ் அரங்கத்தில், செங்கடல் தமிழ்ச் சமூகம் நடத்திய சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இஃப்தார் நோன்பு திறப்பும், அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் இறை அழைப்பாளர் மௌலவி அப்துல் பாசித் புகாரி அவர்களின் சிறப்புரை உடன் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.

நிகழ்சைக்கு யூனிவர்சல் இன்ஸ்பெக்ஷன் நிறுவனத்தின் CEO & நிர்வாக இயக்குனரும் மூன்று முறை கின்னஸ் உலக சாதனை புரிந்த தங்கத் தமிழன் விருதினைப் பெற்ற பக்ருதீன் அப்துல் மஜீத் அவர்களின் தலைமை உரையுடன் இஸ்லாம் குறித்த கேள்விகள் கேட்டு சரியான விடையளித்தோருக்கும், வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் அளித்து செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் அத்தனை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களாக இந்நிகழ்ச்சிக்கு உதவிய பெண்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.

மேடையில் மதினா நகர் செங்கடல் தமிழ்ச் சமூக பொறுப்பாளர் சமூக செயற்பாட்டாளர் அஷரஃப் அலி, ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ரமணன்,எம்.சிராஜ் த.மு.மு.க மற்றும் இந்தியன் வெல்ஃபேர் ஃபாரத்தின் ஜெத்தா செயலாளர் கீழை இர்ஃபான், மேற்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் இப்ராஹிம் அலி, தாவா சென்டர் ஹாஜா முகைதீன் மற்றும் மதுரை சாகுல் ஹமீது ஆகியோர் அலங்கரித்தனர்.

செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் நிறுவனரும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை லயன் ஜாஹிர் ஹூஷேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெத்தா தமிழ்ச் சங்க முன்னோடி எம்.சிராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்க செங்கடல் குமால் மைதீன் நன்றி நவிழ்ந்தார்.

முன்னதாக சிறுமிகள் ஃப்யானா ஃபைசல் மற்றும் ஹனியா ஹாஜா ஆகியோர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவினை வழங்கி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக இருந்தது என பாராட்டும் படி ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியினை செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் அப்பாஸ், குலாம் மைதீன், சாதிக் பாட்சா, இர்ஃபான், ராயிஸ், முகமது உமர், ஃபாரூக், தஞ்சை லயன் ஜாஹிர் ஹூஷேன், சலீம், இஸ்மாயில், ஜலீல் அஹமத், அஷரஃப் அலி, ஜொஹராள் குலாம் ஆகியோருடன் இந்தியப் பன்னாட்டுப் பள்ளி ஆசிரியை பானு ஹமீத், பர்வீன் ரஃபிக், அப்துல் அஜீஜ், ரஃபிக் ஹூஸைன், சிவகாசி ஜாகிர், யூ.ஐ.சி நிறுவன யாசிர், ஆடியோ இஸ்மாயில், ஏகப்பன், செவிலியர் அருள்மதி குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தினர்.
அன்புடன் M. Siraj.
Comments