லோக்சபா தேர்தல் நடந்த சூழலில் ஜனநாயக விதிமுறைகளே மிதித்து, கேவலமான செயல்பாடுகள் மூலம் எதிர் காட்சிகளை பலவீனப்படுத்த மோடியும் ப ஜ கா வும் முயற்சித்தாலும் அதையும் கடந்து ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றம் ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற விசுவாசிகளுக்கு உற்சாகமளிப்பதாக ஓஐசிசி மேற்கு மண்டலக் குழு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட தடைகளை தாண்டி காங்கிரஸ் அடைந்துள்ள முன்னேற்றம் ராகுல் காந்தியின் மன உறுதி, கடின உழைப்பு, பாரத் ஜோடோ யாத்திரை உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகு கிடைத்த பலன் தான் இந்த வெற்றி. பிரதமர் தனது வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியபோது , காங்கிரஸ் நியாய் திட்டம் மக்கள் முக்கிய பிரச்சனைகள் மற்றும் மக்கள் திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தது. தேர்தலில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பது ராகுலின் மாபெரும் வெற்றியும் மோடியின் புகழுக்கு ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியும் ஆகும். பிரதமரின் பெரும்பான்மை வெகுவாக குறைந்திருப்பதும் , அயோத்தியில் கூட பாஜகவின் தோல்வியும் வகுப்புவாத அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்பதை நிரூபிக்கிறது.
கேரளா மாநில அரசுக்கு எதிரான, ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு, UDF-ன் அமோக வெற்றியில் பெரும் பங்கு வகித்துள்ளது. மோடியின் வகுப்புவாத அரசியலுக்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வைத்துள்ள சமரச கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பும் இந்தத் தேர்தலில் எதிரொலித்ததாக ஓஐசிசி மேற்கு மண்டலக் குழு கருத்து தெரிவித்துள்ளது.
அரசியல் சாசனத்தைப் புறக்கணித்து சங்க பரிவார திட்டங்களை செயல்படுத்தும் மோடி மற்றும் பாஜகவின் முயற்சிகளுக்கு காங்கிரஸின் இந்த வெற்றி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது என்று OICC மேற்கு மண்டலக் குழுத் தலைவர் ஹக்கீம் பரக்கல் கருத்து தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்கு நியாய் போன்ற திட்டங்கள் மக்கள் வரவேற்றது தேர்தலில் காங்கிரஸுக்கு உதவியுள்ளன. பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இந்தியக் கூட்டணியை உருவாக்குவதற்கு வழிவகுத்த அக் கட்சியின் தலைமையின் தீவிர நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என ஹக்கீம் பரக்கல் (Hakeem Parakkal ) தெரிவித்தார்.
அன்புடன் M. Siraj
Comments