சவுதி அரேபியாவில் அயலகத் தமிழர் திருநாள் NRTIA (Non Resident Tamil Indian Association) வெளிநாடு தமிழர்கள் நல சங்கம் மற்றும் லுலு ஹைப்பர் மார்க்கெட் முரபா இணைந்து அவின்யு மாலில் மாபெரும் தமிழர் திருநாளை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஜனவரி 18.01.2024 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை லுலு ஹைப்பர் மார்க்கெட் முரபா ரியாத்தில் வைத்து ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சவூதி அரேபியாவின் இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் திரு. அபு மாத்தன் ஜார்ஜ் தமிழர் திருநாள் பற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். திரு. மொயின் அக்தர் இரண்டாம் செக்ரட்டரி மற்றும் நலப்பணித் துறைத் தலைவர் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாயகத்தில் இருந்து வந்திருந்த திருமதி. அறந்தாங்கி நிஷா, திரு. அசார் ஆகிய இருவரும் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்து சரவெடி நகைச்சுவை பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழக மக்களுக்காக உழைக்கும் சங்கங்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்தியன் வெல்பயர் பாரம் திரு. மீமிசல் நூர் அவர்கள், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திரு.சமீம்ஹான் அவர்கள், ரியாத் இந்தியன் அஸோசியேஷன் சார்பாக திரு.மாதவன் அவர்கள். காயிதே மில்லத் பேரவையின் சார்பாக திரு.k.m.நாசர், இந்திய தூதரகத்தின் உடைய தமிழகநலனுக்கான பணியில் சேரிங் கம்முயுனிட்டியில் இருக்கும் திரு.சலீம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக திரு.ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் ஜெத்தா தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் United Tamil Sangam தின் பொறுப்பாளர்கள் திரு. SKS சிக்கந்தர் பாபு தொழிலதிபர், திரு.உமா ஷங்கர் ஜெத்தா தமிழ்ச்சங்கம், முனைவர் திரு .ஜெரால்ட் வில்சன், திரு.காஜா மொஹிதீன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழ் மொழி அல்ல நம் உயிர்...இந்த விழாவினை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த NRTIA ன் அமைப்பாளர் திரு. பிரேம்நாத் அவர்கள், துணை அமைப்பாளர் திரு சந்தோஷ் பிரேம் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் திரு. ஜனார்தனன் அவர்கள், துணை ஒருங்கிணைப்பாளர் திரு. வஸிம்ராஜா அவர்கள், தலைவர் திரு. ஆயப்பாடி ஜாஹிர் உசேன் அவர்கள், மகளிர் அணி டாக்டர் கவிதா அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கமிட்டி செக்ரேட்டரி திரு.முருகவேல் திரு.சலீம் நகர, துணை தலைவர் நவாஸ் அவர்கள், தாயகத்தில் இருந்து உதவிய செயலாளர் திரு.சாமித்துரை, பொருளாளர் திரு.ஆறுமுகம் அவர்கள், மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அன்புடன் சிராஜ்
Comments