புதிய ஏர் bubbles ஒப்பந்தத்தின் கீழ், கோவிட் 19 விதிமுறைகளுக்கு இணங்க இரு நாடுகளுக்கு இடையே விமான சேவைகள் ஜனவரி 1 முதல் தொடக்கம்.
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில், "இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஜனவரி 1, 2022 முதல் Air bubbles ஏற்பாட்டை அறிவிப்பதில் தூதரகம் மகிழ்ச்சி அடைகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியா - சவுதி அரேபியா இடையே Air bubbles ஒப்பந்தம் :
சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே சிறப்பு நேரடி விமானங்கள் தொடங்குவதாக அறிவித்தது. அதன்படி ஜனவரி 1 முதல் இந்தியா சவுதி அரேபியா இடையே நேரடி விமான சேவை துவங்கும்.
தற்போது வரை சவுதி அரேபியா செல்ல இந்தியர்கள் பல்வேறு வளைகுடா நாடுகளில் 14 நாட்கள் தங்கிய பின்னே சவுதிஅரேபியா செல்கிறார்கள்.
சவுதி அரேபியா கோவாக்சின் பயணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது:
டிசம்பர் 20 அன்று, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம், பயணத்திற்கான பாரத் பயோடெக்கின் கோவாக்சினை நாடு அங்கீகரித்துள்ளதாகவும், ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் இப்போது ராஜ்யத்திற்குள் நுழையலாம் என்றும் அறிவித்தது.
"கோவாக்சின்' தடுப்பூசி போடப்பட்ட இந்திய நாட்டவர்கள் இப்போது ராஜ்யத்திற்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. தடுப்பூசி சான்றிதழ்கள் குடியிருப்பாளர்களுக்கான சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்திலும், பார்வையாளர்களுக்காக முகீம் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
Comentarios