சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்காலிக பயண இடைநிறுத்தத்தை எதிர்கொள்ளும் 19 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவரின் வதிவிட அனுமதி (இகாமா) மற்றும் வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாக்களின் செல்லுபடியை தானாக மார்ச் 31 வரை நீட்டிக்கும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) அறிவித்தது.
அந்த 19 நாடுகளின் பட்டியலில் - துருக்கி, லெபனான், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், போட்ஸ்வானா, லெசோதோ, எஸ்வதினி, மலாவி, சாம்பியா, மடகாஸ்கர், அங்கோலா, சீஷெல்ஸ், மொரிஷியஸ், கொமொரோஸ் மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும். இந்த 19 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை. சவுதி அரேபியாவிற்கு நேரடியாக வரமுடியாத நாடுகளுக்கு மட்டுமே இந்த நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
இந்த 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போது ராஜ்ஜியத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டவர்களின் இகாமா மற்றும் வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாவின் செல்லுபடியை தானாக நீட்டிக்கத் தொடங்கியுள்ளதாக ஜவாசத் அறிவித்துள்ளது.
ரீ-என்ட்ரி விசாவில் புறப்படுவதற்கு முன்பு ராஜ்யத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்துக் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தாது.
மேலும் ராஜ்ஜியத்திற்கு வெளியே இருப்பவர்கள் மற்றும் தொற்றுநோயின் விளைவாக பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விசிட் விசாக்களின் செல்லுபடியை நீட்டிப்பதும் மன்னரின் உத்தரவில் அடங்கும். இதும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
Comments